களுவாஞ்சிகுடியில் சஜீத்! கொலையாளிகளுக்கும் கூண்டாம்..

பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் உலள்ள அவரின் அலுவலத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச மற்றும்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்களுக்குமிடையிலான  விசேட கலந்துரையாடல் நேற்று மாலை  ( 15 )  இடம்பெற்றது.

களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச  களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட  பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் , வாகரை இல்மனையிற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் என இரா,சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும், இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் தமது அரசாட்சியில்  நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உடைய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், இலங்கையில் தமிழரசு கட்சியினுடைய மாவட்ட , தொகுதி, மத்திய , பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் உடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கை தமிழரசு  கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டனர் .