தியாகதீபம் திலீபனின் 37 வது வருட நினை வேந்தலையிட்டு மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தலைமையில் அன்னராது திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி; முதல் நாள் திலீபன் வாரத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
கடந்த 1987 ம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபன் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தார்.
திலீபனின் 37 வது நினைவேந்தலையிட்டு அவர் உண்ணாவிரம் இன்று 15ம் திகதி ஆரம்பித்த நாளை தீலீபன் வாரமாக அறித்து நினைவேந்தல்கள் இடம்பெற்று வந்தன இதனடிப்படையில் தீலுpபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதில் நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அன்னராது திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.