மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்துக்கு மாணவர்கள் வருகை தந்தனர். இந்த பரீட்சை நிலையத்திற்கு அல்-ஹிக்மா ஜூனியர் வித்தியாலயம், அல்-ஹம்றா , அல்- மதீனா, அல்-மினன், நாவலர் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக வருகை தந்திருந்தனர்.
ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், அல்-ஹிக்மா ஜூனியர் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம்.மஹ்றூப் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வந்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
பரீட்சை நிலையத்திற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டிருந்ததோடு பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.