அம்பாறை மாவட்டத்தில் ஆர்வத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பங்கேற்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.
இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.
மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைபெறுவதற்கு பெற்றேர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
முதலில் மு. ப. 9.30 மணி முதல் பிற்பகல் 10.45 வரை பகுதி ii வினாத்தாள் இடம்பெறவுள்ளது.மு. ப. 10.45 மணி முதல் பிற்பகல் 12.15 வரை பகுதி i வினாத்தாள் இடம்பெறும்.மு.ப. 10.45 – மு.ப. 11.15 வரை இடைவேளை வழங்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த இடைவேளையின் போது மாணவர்கள் வெளியில் செல்லவோ, பெற்றோர் பாடசாலைக்குள் செல்லவோ அனுமதி வழங்கப்படாது என அவர் தெரிவித்தார்.
பரீட்சைக்கு நேர காலத்துடன் மாணவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோருக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன் 323879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.