சிறுவர் தினத்தை முன்னிட்டு விவாத போட்டி பயிற்சிகள்!

மட்டக்களப்பில் சிறவர் தினத்தை முன்னிட்டு விவாத போட்டிகளுக்கான பயிற்சியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ் எற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) திகதி இடம் பெற்றது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் 2024 ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் தின கருப்பொருளாக “பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம் ” எனும் கருப்பொருளை வலுப்படுத்தும் முகமாக இப் பயிற்சி பாசறை நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் காணப்படும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்துவதற்கும் சிறார்களை ஆளுமையுடன் கூடிய பேச்சாற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட பயிற்சி பாசறைக்கான அனுசரனை சேரி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது விவாத நுட்பங்கள் மற்றும் விவாதத் திறன்களை மேம்படுத்துவதற்கு இத் துறையில் நிபுனத்துவம் பெற்றவர்கள் மூலம் ஆலோசனை மற்றும் நுணுக்கங்கள் சிறார்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் வளவாளராக சிவ வரதகரன், அன்பழகன் குறூஸ் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சிறுவர்களுக்கான உரிமை, சிறுவர் பாதுகாப்பு, சமகால சவால்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் சேரி நிறுவன தேசிய திட்ட முகாமையாளர் வி.இ தர்ஷன், பதவி நிலை உதவியாளர் எம். ரிழா, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.