தமிழ் மக்களின் தெரிவு ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும்

ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் சனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ் மக்களின் தெரிவு ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது ஆழமான நம்பிக்கை என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்தள்ளது.

நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கும் தனது ஊடகச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது

மீண்டும் ஒரு சனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் சனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது சனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு அவர்களது தனி கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த சனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய சனாதிபதி சனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சாரமேடைகளை அலங்கரிக்கின்றார்கள்.

ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் சனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பததோடல்லமால் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைசக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூட்டாகவே கட்டமைக்கின்றார்கள்.

தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வௌ;வேறு வடிவங்கள் பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

உதாரணமாக ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல் தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல் , ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்கு முறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது.

ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன. சிங்கள பௌத்த மயமாக்ல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார்.

இம் முக்கியமான காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது ஆழமான நம்பிக்கை என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்தள்ளது.