மட்டக்களப்பில் விசேட தேவைக்குரிய நபர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சியகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நேற்று (13) திகதி இடம் பெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம் சுபியானின் ஒழுங்குபடுத்தலின் கீழ் விசேட தேவைக்குரிய நபர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவைக்குரிய நபர்கள் தமது வாக்கினை வழங்குவதற்கான விசேட அடையாள அட்டைகள் முதல்முறையா வழங்கப்பட்டது.
விசேட தேவைக்குரிய நபர்களுக்காய அடையாள அட்டைகள் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதற்கட்டமாக 386 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் 10 வருட காலம் செல்லுபடியாகக் குடிய வகையில் இவ் அட்டைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 8310 மேற்பட்ட விசேட தேவைக்குறிய நபர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச. கோணேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.