அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் கடந்த ஒன்பது வருடங்களாக ஆசிரியர் சேவையாற்றிய ஏ.பேரின்பராசா விவசாயத்துறை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று உதவி விவசாயப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளமையினை பாராட்டி கௌரவித்து அவருக்கு பிரியாவிடையளிக்கும் வைபவம் நேற்று(12) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
அதிபர் ஏ.எச்.பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது உதவி விவசாயப் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.பேரின்பரசா பாடசாலையின் ஆளணியினரால் நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசில்கள் போன்றன வழங்கி கௌவிக்கப்பட்டார்.
பாடசாலை நலன்புரி அமைப்பின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வின்போது, பாடசாலை கல்விச் செயற்பாடுகளில் அவர் தன்னலமற்ற சேவையினை புரிந்தமை தொடர்பிலும், பாடசாலையின் ஆளணியினருடன் பரஸ்பரம் ஒற்றுமையுடனான உறவினைப் பேணியதுடன், பாடசாலை நிருவாக செயற்பாடுகளுக்கும் தன்னாலான பூரண ஒத்துழைப்புகளையும் நல்கியமை பற்றியும் இதன்போது அதிபர் தலைமையிலான ஆளணியினர் பிரஸ்தாபித்து உரையாற்றிமை குறிப்பிடத்தக்கது.