ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனை தேர்தல் தொகுதியின் கல்முனை 12ம் வட்டாரத்தை மையப்படுத்திய கருத்தரங்கு புதன்கிழமை (11) இரவு முஸ்லிம் காங்கிரஸின் 12ம் வட்டார அமைப்பாளரும், முன்னாள் மாநகர சபை வேட்பாளருமான பிரிலியண்ட் எம்.எஸ்.பழிலின் தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமான சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும் இப் பிரச்சார கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஸாக், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.நிசார், எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், ஏ,சி சமால்தீன், கல்முனை 12ம் வட்டார வேட்பாளர் எம் ரகுமான், கல்முனை சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எச் கபீர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.