(எருவில் துசி) அம்பிலாந்துறையில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதாரித்து கூட்டம் ஒன்று (11) நடைபெற்றது.
கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் எதிர்வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அதிகளவு மக்கள் தமிழ் தேசிய உணர்வுடன் செயற்படுவதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது மேலும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்கள் கலந்து ரையாற்றும் போது தமது பொது வேட்பாளர் நியமனத்தை பல்வேறு தரப்பினர் ஆரம்ப காலத்திலே எதிர்த்த போதிலும் தற்போது மக்கள் தமக்கு அதிகளவு ஆதரவினை வழங்குவதோடு புலம்பெயர் தமிழர்களும் தமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்த தேர்தலில் அழிக்கப்படுகின்ற தமிழரின் ஒவ்வொரு வாக்கும் எமது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டையும் தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கான தீர்வாகவும் அமையும்எனவே இந்த வாக்களிப்பானது சிங்கள தலைவர்களுக்கு எடுத்துரைக்க வழி அமைக்கும் எனவும் கருத்துரைத்ததோடு மக்கள் தமக்கு இரத்தத் திலகம் இட்டுக் கூட வரவேற்பதாகவும் எதிர் வருகின்ற 21 ஆம் திகதி எமது தமிழ் தேசிய உணர்வாளர்கள் தமிழ் தேசிய சிந்தனையுடையவர்கள் தமிழ் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென தனது கருத்துரையில் தெரிவித்தார்.