உணவு கையாள்பவர்கள், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், நுகர்வோரின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உணவு விற்பனையில் வெற்றியையும் உறுதி செய்யலாம் – வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன்
மக்களின் உடல் நலத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாக காணப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்பனவற்றை உறுதி செய்வதற்காக, உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு பதப்படுத்தி பொதியிடும் நிறுவனங்களின் பொறுப்பு மிக்கவர்களுடன் உரையாடி அவர்களுக்கான வழிப்படுத்தல்களை மேற்கொள்ளும் கலந்துரையால் ஒன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல்களோடு கலந்துரையாடலை ஒருங்கிணைப்புச் செய்திருந்த, தரமுகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்.வை. சகாயதர்சினி அவர்கள், உணவுப் பாதுகாப்புக்கான வழிமுறைகள், விற்பனை நிலையங்கள் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் பற்றியதான விளக்கங்களை வழங்கியிருந்தார்,
தொடர்ந்து இவ்விடயத்தில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றை வெற்றிகொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரவுக்குட்ட சுமார் 75 மேற்பட்ட நிறுவனப் பொறுப்பாளர்கள் உட்பட, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி இ.உதயகுமார், உணவு மருந்து பரிசோதகர்கள், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.