திஸ்ஸ அத்தநாயக்காவிடம் நஷ்டஈடு கோரும் ஹரிணி அமரசூரிய

பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (11) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி மாவனெல்லையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது திஸ்ஸ அத்தநாயக்கா பேசுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் கண்டி தலதா பெரஹரவை நிறுத்தும் என தான் கூறியதாக பகிரங்கமாக கூறியிருந்தார் என ஹரிணி அமரசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டத்தரணி ஷானிகா சில்வா ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.