புதிய வளத்தாப்பிட்டியில் சஜித்தின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு 

( வி.ரி.சகாதேவராஜா)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அம்பாறை புதிய வளத்தாபிட்டியில் நேற்று மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் வெ. வினோகாந்த் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இவ் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை நகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் உட்பட புதிய வளத்தாபிட்டி, பழைய வளத்தாபிட்டி பளவெளி க மல்வத்தை போன்ற கிராமங்களைச் சேர்ந்த சஜித் பிரேமதாச எதிர்கால ஜனாதிபதி அவர்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.