அநுர ரணில் இடையே பெரிய டீல் உள்ளது!

தற்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தை சுருக்கி மக்களின் மீது சுமையை அதிகரித்து மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்துகின்ற கொள்கை திட்டமொன்றை பின்பற்றுகின்றார். அத்தோடு தன்னை தோல்வியடையச் செய்து அநுரகுமாரவை வெற்றியடைய செய்வதற்கு அநுரகுமார திசாநாயக்க உடன் வித்தியாசமான கூட்டமைப்பு ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணிலும் அநுரவும் சிறந்த அரசியல் டீல் ஒன்றை செய்திருக்கின்றார். அவர்களுடைய டீல் தொடர்பில் தனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு 220 இலட்சம் மக்களுடனே டீல் இருக்கின்றது. இந்த மக்கள் வீழ்ந்துள்ள இடத்திலிருந்து மீட்டெடுப்பதே தமது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு ஜனாதிபதி அவரின் நெருங்கியவர்களுக்கும், அவரின் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் அதிக சலுகை வழங்குவது அவருடைய பழக்கமாகும். மிகப்பெரிய செல்வந்தர்களே அவருடைய வகுப்பினராகும். அதனால் தான் IMF வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கடனை மறுசீரமைக்கின்ற போது தொழிலாளர் வர்க்க மக்களின் மீது சுமையை அதிகரிக்கின்றார். சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுகுமார ரணில் விக்ரமசிங்க உடன் டீல் செய்திருக்கின்றார். இவர்கள் நாட்டை கட்டியெழுப்பாமல் அவர்களின் முன்னேற்றத்திற்காகவே டீல் செய்திருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த முறை 69 இலட்சத்தை வழங்கி தவறிழைத்துக் கொண்டமையால் மீண்டும் ஒருமுறை பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ரணிலும் அநுரவும் ஒன்றாக இணைந்து கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். நாட்டிற்கொன்றை காட்டிக் கொண்டு கீழால் இருவரும் டீல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பிரதமர் பதவிகளை பிரித்து கொண்டு இருக்கின்றார்களா என்கின்ற சந்தேகமும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 43 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 10 ஆம் திகதி புத்தளத்தில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க தகவல்களின் அடிப்படையில்
269 000 சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள், தொழில் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதினால் இந்த மக்களை மீட்டெடுக்க வேண்டும். அத்தோடு ஒரு மில்லியன் புதிய தொழில் முனைவர்களை உருவாக்குவோம். நாடளாவிய ரீதியில் பாரிய கல்விப் புரட்சி ஒன்றையும் ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

QR code முறையை மையமாகக் கொண்டு மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், எரிபொருள் நிவாரணங்களை வழங்குவோம். அத்தோடு மீனவர்களுக்கான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கும் சலுகைகளை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார.

🟩 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொறுப்புக் கூற வேண்டிய தீவிரவாதிகளுக்கும், மிலேச்சத்தனமான சூத்திரதாரிகளுக்கும் சட்டத்தின் முன் நிறுத்தி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்குவோம். தற்போதுள்ள பதில் ஜனாதிபதியும் நியாயத்தை நிலை நாட்டுவதாக கூறினாலும், கோட்டாபயவும் ரணிலும் உண்மையை மறைத்திருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்திக்கு எவருடனும் டீல்கள் இல்லாமையால் இந்த உண்மையை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச என்பவர் பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும், வரங்களுக்காகவும் விலை போகின்றவர் அல்ல. 220 இலட்சம் மக்களின் நம்பிக்கையை வென்றவராக ஆத்ம கௌரவத்தை பாதுகாத்து செயல்படுகின்ற ஒருவராவார். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்தார்.