நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மயக்கமருந்து இயந்திரம்

நிந்தவூர் ஆதார வைதியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு அத்தியாவசியத் தேவையாகக் காணப்பட்ட மயக்க மருந்து இயந்திரம் (Anesthesia Machine) மற்றும் மகப்பேற்று விடுதிக்குரிய Cardiotocography (CTG) இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

PSDG வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 10 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் அண்மையில் (09) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரும், மகப்பேற்று வைத்திய நிபுணருமான டொக்டர் எம்.எஸ்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.