நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம் பெற வேண்டும்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான களநிலவரங்கள் தொடர்பான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பானது (09) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர் மைக்கல் பீட்டர்ஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது. நீதியான தேர்தல், தேர்தல் வன்முறை சம்பவங்கள், தற்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று இடம் பெறவேண்டும் தொடர்பாக இங்கு உரிய கண்காணிப்பு குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் மேலும் எடுத்துரைக்கப்பட்டது.