எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரனை ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடலில் இன்று (09) திகதி ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களால் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வீதிமிறல்கள், தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம்
கேட்டறிந்து கொண்டனர்.

இது வரை மாவட்டத்தில் பாரிய தேர்தல்கள் வீதிமீறல்கள் இடம் பெறவில்லை என்பதுடன் சிறிய நடுத்தரத்திலான மிறல் இடம் பெற்றுள்ளதாகவுவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் இதன் போது குறித்த குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் காண்காணிப்பாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் நீண்ட கால மேற்பார்வையாளரான சிசிலியா கீவேனி கருத்து தெரிவிக்கையில், இம்முறையுடன் இலங்கையில் தாம் 7 தடவைகள் தேர்தல்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தேர்தல்கள் வீதி மிறல்களை தலைமை காரியாலத்திற்கு அறிக்கையிட்டு வருவதாக தெரிவித்ததுடன், பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல்கள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வினையும் குறித்த குழுவினர் கண்காணிப்பு மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.