திருமலையில் இருந்து வெருகல் நோக்கிய ஏழு நாள் பாதயாத்திரை ஆரம்பம்

திருகோணலையில் இருந்து வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கிய ஏழு நாள் பாதயாத்திரை இன்று ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருகோணமலை
திருகோணேஸ்வரர் ஆலயத்தில் இன்று அதிகாலை இடம் பெற்ற விசேட பூஜையைடுத்து பாத யாத்திரை ஆரம்பமானது .

செல்வச்சந்நிதி கதிர்காமம் பாதயாத்திரை குழுவின் தலைவர் ஜெயா வேல்சாமி உள்ளிட்டோரும் இப் பாதயாத்திரையில் கலந்து கொள்கின்றார்கள்.

இவர்கள் ஏழு நாள் பயணித்து எதிர்வரும் 12ஆம் தேதி வெருகலை சென்றடைய இருக்கிறார்கள்.