மட்டக்களப்பிற்கு இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலாச்சார பரிமாற்றத்தையும் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான விஜயம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நேற்று (05) இடம் பெற்றது.
பொது நிர்வாக அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் சகவாழ்வு நல்லிணக்கத்தை மேம்படுத்த இவ்வாறா செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் எம்.எல் கம்பன்பில, உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மொழிகள் பிரிவின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ. ஏ. எப். நதிமியா, மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற இடங்களை இரத்தினபுரி மாவட்ட இளைஞர் யூவதிகள் பார்வையிட்டனர்.