தபால் மூல வாக்கெடுப்பிற்க்கான மூன்றாம் நாள் இன்று

ஒன்பதாவது ஜனாதிபதியை
தேர்ந்தெடுக்கும் தபால் மூல வாக்கெடுப்பு மூன்றாவது நாளாக இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுவரும் நிலையில்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் தபால் மூல வாக்களிப்பு இன்று (05) திகதி காலை 8:30 மணி தொடக்கம் இடம் பெற்று வருகின்றது.

சுமூகமான முறையில் இடம் பெற்றுவரும் தபால்மூல வாக்கெடுப்பில் ஆர்வத்துடன்
உத்தியோகத்தர்கள் வாக்களித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை தபல்மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்ற பிரதேச செயலகங்கள், ஏனைய திணைக்களங்களில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர்கள் போன்றோர் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தமது தபால்மூல வாக்கினை பதிவு செய்துவருகின்றனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்தி 116 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிபபிடத்தக்கது.