2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் இன்று பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமானது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர்.திரவியராஜ் தலைமையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இம்முறை வழமைக்கு மாறாக தபால்மூல வாக்களிப்பில் கலந்து கொள்ள உத்தியோகத்தர்கள் அதிக ஆர்வம் காட்டியதையும் காணமுடிந்தது.
அதிகமான வேட்பாளர்கள் தேர்தலில் களம் இறக்கிய நிலையில் வாக்களிப்பிற்கான அதிக நேரத்தை உத்தியோகத்தர்கள் எடுத்துக்கொண்;டமையும் அவதானிக்க முடிந்தது.