(ஏறாவூர் நிருபர்)சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாநாடு இன்று மட்டக்களப்பு கொம்மாதுறையிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 03.09.2024 நடைபெற்றது.
சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிறி மேகநாதன் தலைமையில் சர்வமத ஆசியுடன் இம்மாநாடு ஆரம்பமானது.
அமைப்பின் தலைவர் கீர்த்தி சிறி கலாநிதி ரீ. கப்பில ரன்ஜன் பெணான்டோ, விமானப்படையின் மட்டக்களப்பு ஸ்கொட்ரன் லீடர் ஏரீ. செல்லர் , சட்டத்தரணிகள், பொலிஸ் உயரதிகாரிகள், அமைப்பின் களுத்தறை மாவட்ட, வடமேல்; மாகாண, ஊவா மாகாண, வட மத்திய மாகாண பணிப்பாளர்கள்,பௌத்த, இந்து,இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமய தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மாதர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் அமைப்பின் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு கிளைகளின் பிரதிநிதிகள், தொண்டர் அமைப்புக்களின் பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பிரசன்னமாயிருந்தனர்.
மனித உரிமைகள் தொடர்பில் சமூகத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் சமூகத்தலைவர்கள் கருத்துத்தெரிவித்தனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு சட்டரீதியிலான வழிகாட்டல்கள் மற்றும் தீர்வுகள் வழங்குவதற்கு ஏதுவாகவே மாவட்டங்கள் தோறும் அலுவலகங்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு பல்வேறு வழிகளில் ஒத்தாசைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவரும் கிராம சேவையாளர்கள்> பொலிஸ் அதிகாரிகள்> கல்விமான்கள்> மதத்தலைவர்கள் உள்ளிட்ட 35 பேர் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஊடக செயற்பாடுகள் மூலமாக ஒத்துழைப்பினை நல்கிவரும் பிராந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏறாவூர் எம்ஜிஏ. நாஸர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.