( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்திய முதல் நிகழ்வு பிரதிஅதிபர் ம.தர்மலிங்கம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு.நீலோந்திரன்,திணைக்கள வளவாளர் நா. சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளுக்கான சுவாமியின் திருவுருவப்படங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி ஏற்பாடுகளை மேற்கொண்டார்.