தமிழ் தலைவர்களை கண்டிக்கும் வெள்ளிமலை(Vedio)

(எருவில் துசி) களுவாஞ்சிகுடியில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான வெள்ளி மலை அவர்கள் இன்றைய தேர்தல் தொடர்பாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பொது வேட்பாளர் சம்மந்தமாகவும் தனது ஆணித்தனமான கருத்தை ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

அவர் ஊடக சந்திப்பின்போது தெரிவித்ததாவது…

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களை சார்ந்த ஜனாதிபதி அபேட்சகர்களை ஆதரிக்க சொல்கின்ற தமிழ் தலைவர்களை தான் வெறுப்பதாகவும் 1948 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதில் தங்களுடைய நிலைப்பாட்டில் எந்த விதமான முன்னேற்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் எனவே இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க சொல்வது என்பது பொருத்தமற்றது எனவும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் பொது வேட்பாளரை தாம் மறுக்கவில்லை எனவும் அதற்கு தன்னுடைய செயல்பாடு எதிரானவை அல்ல எனவும் அவருடைய கருத்தை பதிவு செய்தார். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நன்கு அறிந்து சிந்தித்து தமக்கான வாக்கை பதிவு செய்து தங்களுடைய ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துமாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.