வவுனியாவில் இலங்கைத் தமிழராக்கட்சி மத்திய குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கட்சியின் கொள்கை,யாப்புக்கு எதிரானது
===============================
இலக்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் 01.09.2024 அன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
அக்கூட்டத்தில் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பது என்றும், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது இல்லை என்றும் அவரை போட்டியில் இருந்து விலகுமாறு கேட்பது என்றும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் தொடர்பாக எமது ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றோம்.இவை கட்சியின் கொள்கை மற்றும் யாப்புக்கு எதிரானதாகும்.
இதற்கான காரணத்தையும் கூற விரும்புகின்றேன். எமது கட்சி யாப்பின் விதிப்படி மத்திய குழுவைக் கூட்டுவதற்கான கூட்டத்திற்குரிய அழைப்புக் கடிதத்தினை 7 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த விதி மீறப்பட்டு 01.09.2024 திகதிய கூட்டத்திற்கான கடிதம் 28.08.2024 கதிகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனுப்பப்பட்ட கடிதத்தில் குறித்தவொரு வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக இறுதியான தீர்மானம் எடுப்பது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. அதேவேளை, அன்றைய கூட்டத்தில் தலைவர் சோ.சேனாதிராசா அவர்கள் சுகவீனம் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை. அவரிடமும் குறித்த தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்படவில்லை. ஆதரிக்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கவுள்ளாக தலைவரிடம் அறிவிக்கப்படவில்லை.
மேலும், முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,சாள்ஸ் நிமலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன்,சிறிநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இப்படியானவர்களின் மாற்றுத்தருத்துகள் அதாவது பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான கருத்து ஏற்கனவே இரு கூட்டங்களில் முன்னவக்கப்பட்டன
சிங்கள வேட்பாளர்களை ஆதரிப்பதாக இருந்தால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டித் தீர்வு பற்றிக குறிப்பிட வேண்டும் என்றும் 11.08, 2024 கூட்டத்தில் பா.உ சிறிதரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் அதனை கூட்டத்தினர் ஏற்றுக் கொண்டனர். அவ்விடயத்தினை சுமந்திரனும் அறிவார்.
ஆனால் சஜித்தின் தேர்தல் விஞ்ஞா பனத்தில் சமஷ்டி பற்றி எதுவும் கூறப்படவில்லை. அப்படியிருக்க சஜித்தை ஆதரிக்க முடிவெடுத்தமை யிலுள்ள மர்மம் என்ன என்பதை மத்திய குழுவினர், பொதுச்சபைபினர் மற்றும் மூலக்கிளையினர் மாத்திரமல்ல, தீர்மானம் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு சொல்லியாக வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியப்பாதை என்பவற்றை சிதைக்கின்ற பலவீீனப்படுத்துகின்ற விசமத்தனமான செயல்களைத் தமிழர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை வேதனையுடன் தெரிவிக்க விரும்புகின் றேன்.
எனவே, 01.09.2024 அன்று எடுக்கப்பட்ட மூன்று தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகம் கூறி வைக்க விரும்புகின்றோம்.