ஆசியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகத்தை கண்டுகொள்ளமல் விட்டது

நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு ஆசியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகத்தை இன்று வரை எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாமல் விட்டது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (31) திருகோணமலையில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

இவ்வாறு ஆசியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகமான திருகோணமலை இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் செய்யவில்லை எனவும் எதிர்வரும் காலங்களில் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து திருகோணமலையில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் “மாற்றத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் அனைத்தும் மீழப்பெறப்பட்டது அவைகள் தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது,தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் ஊடாக நாகப்பட்டினத்தில் இருந்து திருவோணமலை வரை குழாய் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது மேலும் சபுகஸ்கந்த என்னை சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு மாற்றப்படும் அதன் பிற்பாடு திருகோணமலை ஒரு பழம் பொருந்திய இடமாக மாற்றமடையும் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இன்று இடம் பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலபதி, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.