பொது வேட்ப்பாளர் ஒரு புறம் மறு புறம் வேறு ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் அரசியல் தலைவர்களின் தில்லு முல்லு!

சஜீத் எதிர் கட்சியில் இருந்தபோதும் மன்னார் பாடசாலைகளுக்கு பல உதவிகள் புரிந்தவர். இவர் ஆட்சி பீடம் ஏறினால் இன மத வேறுபாடு இன்றி செயல்படுவார். தமிழ் வேட்பாளரை போட்டு அவரை பலிகிடாயாக மாற்றிவிட்டு வேறு ஜனாதிபதிகளுடன் பேசி வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் றிசாட் பதியுதின் இவ்வாறு தெரிவித்தார்.

சனிக்கிழமை (31) காலை மன்னார் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களின் கட்சி அலுவலகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் றிசாட் பதியுதின் திறந்து வைத்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் றிசாட் பதியுதின் திறப்பு விழாவைத் தொடாந்;து ஊடகச் சந்திப்பில் தெரிவித்ததாவது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா எதிர்வரும் 3ந் திகதி காலை 9 மணிக்கும் மாலை 2 மணிக்கும் மன்னாருக்கு விஜயம் செய்ய இருக்கின்றார்.

மன்னார் மக்கள் அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முனைப்புடன் இருந்து வருகின்றனர்.

கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் மற்றும் இந்து மக்களும் கனிசமான அளவு இங்கு இருப்பதுடன் ஒன்றுபட்டு வாழ்கின்றனர்.

இவர்கள் யாவரும் சஜித் பிரேமதாசாவின் வருகைக்காக காத்திருப்பதும் தெரியவருகின்றது. மன்னார் மாவட்டம் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.

இவ்வாறு மன்னார் விவசாயிகளுக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கோத்தபாயாவின் மோசமான ஆட்சியில் யாவரும் மிகவும் மோசமான பொருளாதார பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டிருந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்த மாவட்டத்தை நாம் மீட்டு எடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இந்தியாவுக்கு அருகாமையில் இந்த மாவட்டம் காணப்படுவதால் எமது மீனவர்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியா இலங்கைக்கான உறவின் மூலம் எமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதுடன் இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை , பாலம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதுடன் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் சஜித் பிரேதாசாவுடன் பேசியிருக்கின்றோம்.

இது தொடர்பாக எதிர்வரும் 3ந் திகதி சஜீத் மன்னாருக்கு வருகை தரும் பொழுது அவர் தெளிவாக விளங்கப்படுத்துவார்.

அவர் சொல்வதை நாம் செய்வதற்கு எமது கட்சியும் அத்துடன் சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் . மனோ கணேசன் அவர்களின் கட்சி போன்ற பல கட்சிகள் ஒன்றிணைந்து பிரேமதாசா அவர்களின் வெற்றிக்காக உழைக்கின்றனர்.

தற்பொழுது போட்டியானது சஜீத் அவர்களுக்கும் அனுர குமாராவுக்கும் இடையிலேயே முதலாவது இரண்டாவது போட்டியாக காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணம் மலையகம் அம்பாறை பகுதி மக்கள் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் யாவரும் ஒன்றிணைந்து சஜீத்தை வெற்றிக்கொள்ள காத்திருக்கின்றனர்.

சஜித் அவர்களுடன் தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள தலைமைத்துவம் இணைந்து செயல்படுகின்றது. இன்றைய நிலையில் ஒவ்வவொரு இனமும் பிரிந்து செயல்படாது பொருளாதாரத்தை முதலில் கட்டியெழுப்பப்பட வேண்டும்

அதைத் தொடர்ந்து இங்கு ஒன்றுபட்டுள்ள ஒவ்வொரு இனத்தின் தலைவர்களும் ஒன்றுபட்டு யாவருக்கும் உகந்த செயல்பாட்டில் செயல்படுவர். ஆகவே தலைமைத்துவத்தை நம்ப வேண்டும். நாங்கள் அநியாயத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்.

ஊடகவியளார்கள் கேட்டக் கேள்விக்கு பதிலளிக்கையில் தமிழ் பொது வேட்பாளரைப் பொறுத்தமட்டில் அவரை பலிக்கிடாயாக ஆக்கியுள்ளனர்.

இவர்களின் சிலர் ரணிலுடன் இன்னும் சிலர் சஜீத்துடன் பேசி வருகின்றனர். ஆகவே தமிழ் சமூகம் ஏமாந்து போகக் கூடாது.

உரிமைகள் பேசுவோரின் பிள்ளைகள் வெளிநாட்டில் ஆனால் இங்கு பிள்ளைகளை பறி கொடுத்தவர்களும் அங்கங்களை இழந்தவர்களும் கஷ்டத்தில் வாழ்வோரே தொடர்ந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

ரணில் பல முறை ஆட்சியில் இருந்தார். தமிழ் மக்களுக்கு எதை செய்தார்? சஜீத் எதிர் கட்சியில் இருந்தபோதும் தமிழ் மக்களுக்கு குறிப்பாக பாடசாலைகளுக்கு பல உதவிகளை செய்துள்ளார். முதல் முறை இவர் ஆட்சி பீடம் ஏறினால் எமது மக்களுக்கும் யாவருக்கும் உதவிகள் புரிவார் என இவ்வாறு தெரிவித்தார்.