திருகோணமலையில் ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயம் திறந்து வைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து திருகோணமலை அநுராதபுர சந்தியில் கிளைக்காரியாலயம் இன்று (31)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள அவர்களின் பங்கேற்புடன் திறக்கப்பட்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பின் தலைவர் குமார் ஜெயக்குமாரன் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.