மருதமுனை  கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்.

(பாறுக் ஷிஹான்)  அம்பாறை மாவட்டத்தின் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை  கடற்கரையை துப்பரவு செய்யும் நிகழ்ச்சி அம்பாறை அரசாங்க அதிபர்  சிந்தக அபேவக்கிரம தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன் போது  மருதமுனை  கடற்கரையிலிருந்து பாண்டிருப்பு கடற்கரை வரை  குறித்த கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் துப்பரவு செய்யப்பட்டன.

பிரண்ட்ஷிப்  பவுண்டேஷனால் வழிநடத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு சுதேச முயற்சிகளுக்கான கனடா நிதியம் மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகராலயம் நிதியுதவி அளித்தன.

இதில் சிங்கள, முஸ்லிம், தமிழ் இளைஞர் சமூகம் கலந்து கொண்டதுடன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்  எரிக் வால்ஷ் , கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எச்.அசீம் உட்பட பெருமளவிலான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.