(எருவில் துசி) மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடாத்தும் மண்டூர் தொடக்கம் வெலகலம்பதி முருகன் ஆலயம் வரையான பாத யாத்திரை பக்தி பூர்வமாக நடைபெறுகின்றது.
இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மண்டூர் முருகன் ஆலயத்தில் இருந்து பாத யாத்திரையானது 28.08.2024ந் திகதி ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து குருமன்வெளி எருவில் பிரதான வழியாக வெருகல் முருகன் ஆலயத்தை நோக்கி நடைபெறும் பாதயாத்திரை எதிர்வரும் 2024.09.04ந் திகதி அன்று வெரகலம்பதியை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.