அரசியல் மேடைகளில் மாத்திரம் தான் சமூகத்தின் தலைவன் என காட்டிக்கொள்வது தலைமைத்துவம் அல்ல தனது அரசியல் வாழ்க்கையிலும் அதனை எடுத்து நடப்பவனே உண்மையான சமூகத்து தலைவன் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை திருகோணமலையில் சஜித் பிரேமதேச அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இம்ரான் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…
தேர்தல் காலம் தேர்தல் மேடை என்றால் மாத்திரமே சமூகத்தின் தலைவனை காண முடிகின்றது தேர்தல் காலத்தில் மாத்திரம் சமூக அக்கறை, சமூக ஒற்றுமை, இன ஒற்றுமை என்ற எல்லா ஒற்றுமையும் அப்போதுதான் அவர்களுக்கு நினைவுக்கு வருகின்றது. அவ்வாறான தலைவர்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எமது தலைவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என எமக்கு தெரியும். உண்மையான தலைவன் தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இவ்வாறு இருக்கையில் நாட்டில் தற்போது இடம் பெற்று வரும் தேர்தல் பிரச்சார மேடைகளில் உச்சரிக்கப்படும் ஒரே பெயர் சஜித், ஏன் இவ்வாறு தேர்தல் மேடைகளில் சஜித் பிரேமதாச அவர்களின் பெயரை உச்சரிக்க வேண்டும் அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது, அதனை பொறுத்துக் கொள்ள முடியாத தலைவர்கள் அவர் நாட்டிற்கு செய்த, மக்களுக்கு செய்த சேவையை விமர்சித்து வருகின்றனர். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களை இவ்வாறு பிரச்சார மேடைகளில் அவர்களின் பெயரை இழிவுபடுத்தி தோற்கடிக்க முடியாது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
மேலும் தற்போதய சூழ்நிலையில் சில தலைவர்கள் ஜேவிபி யிருக்கு வாக்குத் திரட்டி அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஜனாதிபதியாகும் கனவில் மூழ்கி, முஸ்லிம் சமூகத்திடையில் வாக்குகளை பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளமை கவலையளிக்கிறது, அனுரகுமார திஸாநாயக்க என்பவர் முஸ்லிம் சமூகத்திற்கு, முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் வேலைகளில் துளி அளவு கூட குரல் கொடுக்காமல் பாராளுமன்றத்தில் கூட சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒளிந்து திரிந்தவர்.
இன்று முஸ்லிம்களை பாதுகாக்க வரும் தலைவர் என தேர்தல் மேடைகளில் பிரச்சாரங்களை எமது சமூகத்தினரோடு சேர்ந்து வாக்கு சேகரிப்பது என்பது கேலிக்கூத்தாக உள்ளது எனவும், இத்தருணத்தில் இன மத பேதமின்றி இனவாதத்திற்கும் ஊழலுக்கும் கைகோர்க்காமல் தனது அரசியல் வாழ்க்கையில் கறைப்படாமல் இருக்கும் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசர் அவர்களை எதிர்வரும் 22 ஆம் தேதி ஜனாதிபதியாக்கி எமது நாட்டை மட்டுமல்லாது எமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.