(அஸ்ஹர் இப்றாஹிம்) திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கல்வி சமூகம் 29 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரிக்கும், மட்டக்களப்பு ,கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரிக்கும் இடையிலான கிறிக்கட் சமர் இம்மாதம் 31 ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை இந்து கல்லூரி அதிபர் எஸ்.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி சமரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் கே.சிவகுமார் பிரதம அதிதியாகவும், திருகோணமலை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.பரமேஸ்வரன் கெளரவ அதிதியாகவும்,சிறுவர் கல்வி உதவிகள் அம்ப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.கங்காதரன் மற்றும் கனடா CED கிங் குறூப் பணிப்பாளர் பெஞ்சமின் லோரன்சுப்பிள்ளை ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.தயாபரன் மற்றும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.கணேசலிங்கம் ஆகியோருக்கிடையிலான கிறிக்கட் சமர் தொடர்பான கலந்துரையாடல் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.