திருகோணமலை சீனாக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிமலையூற்று பள்ளிவாசல் உட்பட திருகோணமலை துறைமுக அதிகார சபை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களில் விவசாய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திருகோணமலை வெள்ளை மணல் பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் மக்கள் வெற்றி பேரணி கூட்டத்தில் கலந்துகொண்ட ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்
கடந்த ஆட்சிக் காலங்களில் இரண்டாம் உலகப் போரின் போது முஸ்லிம்கள் பயன்படுத்திய கரிமலையூற்று பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பூர்வீக காணிகள் இராணுவ மயமாக்கப்பட்டு இன்று வரை மக்கள் பாவனைக்கு இன்றி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குறித்த பள்ளிவாசல் உட்பட அதனை சுற்றியுள்ள காணிகள் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என குறித்த தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கரையோரமாக மக்கள் விவசாய பூர்வீக காணிகள் துறைமுக அதிகார சபையினால் எல்லையிடப்பட்டு அதனை அதிகார சபைக்கு சொந்தமாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த துறைமுக அதிகார சபைக்குட்பட்ட அனைத்து மக்களுக்குரிய பூர்வீக காணிகளும் எதிர்வரும் 22ஆம் திகதி சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படும் என உறுதியளிப்பதாக இதன் போது ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.