திருமலை மறை மாவட்ட ஆயரின் ஆசி பெற்றார் சஜீத் பிரேமதாச

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகிய சஜித் பிரேமதாச அவர்களுக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய நோயல் இம்மானுவல் ஆண்டகை அவர்களுக்கும் இடையிலான சிநேக பூர்வமான சந்திப்பொன்று நேற்று (26) இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தொடரின் ஒரு அங்கமாக இடம்பெற்ற குறித்த சந்திப்பானது இன்று மாலை திருகோணமலை உவர்மலையில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களது நிலைப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நிலமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன்,

திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அவர்களின் ஆசியை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.