(அஸ்ஹர் இப்றாஹிம்) கொழும்பு பிரதேசத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு ,ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சத்தியராசா ஹரிஷனன் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சிவயோகபதி கெளதமன் ஆகிய இருவரும் ஞாயிற்று கிழமை (25)மாலை நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற வேளையில் பாரிய கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.