மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா 60-வது ஆண்டு நிறைவு விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் 2024.08.24- அன்று சனிக்கிழமை நடை பெற்றது .
இந்தியா தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்தஜீ மகாராஜ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானாந்தா ஜீ, தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த ஜீ மகராஜ், இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ், மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ,சுவாமி மாத்ருசேவானந்த ஜீ மகராஜ் ஆகிய ஐந்து துறவிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
வேத பாராயணம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
அறநெறிப்படசாலை மாணவர்களின் பஜனையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின
அதனைத்தொடர்ந்து ஆரத்தி ,இறைவணக்கம் என்பன இடம் பெற்றன .
ஆசியுரையை ராமகிருஷ்ண மிஷன் கொழும்பு கிளைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் வழங்கினார் .
பிரதம விருந்தினர் உரையை ஸ்ரீமத் விமூர்த்தானந்தஜீ மகாராஜ் நிகழ்த்தி இருந்தார் .
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன .
நிகழ்வுக்கு பெற்றோர்கள் , ஆசிரியர்கள் ,பிரதேச வாழ் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.