மன்னார்   பௌத்த சாசன பாதுகாப்பு சபை நிர்வாகத் தெரிவு.

மன்னார் மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபை 2024 ஆம் அண்டு நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு மன்னார் மாவட்ட செயலகத்தில் அண்மையில் செவ்வாய் கிழமை (13) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனேகேஸ்வரன் , பௌத்த மத அலுவலக திணைக்களத்தின்  ஆணையாளர் அசேகர மதுசிங்க , மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் கலாச்சார அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு விகாரைகளில் ஆறு பௌத்த குருமார்கள் மட்டுமே இவ் தெரிவில் கலந்து கொண்டனர்.

இத் தெரிவில் மன்னார் மாவட்ட பவத்த சாசன பாதுகாப்பு சபை நடப்ப வருட தலைவராக மன்னார் மாதோட்ட விகாரை வண அம்பகவகே சங்கர் ரகித்த குருவும் செயலாளராக பிரதம குரு முருங்கன் புராதன மஹா விகாரை அப்பிவண.வல்பொல சரண குருவும் 2021 ஆம் ஆண்டு தெரிவுக்குப் பின் மீண்டும் எகமனதாக தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

WhatsApp Image 2024-08-22 at 3.07.29 PM (1).jpegWhatsApp Image 2024-08-22 at 3.07.28 PM (1).jpegWhatsApp Image 2024-08-22 at 3.07.28 PM.jpegWhatsApp Image 2024-08-22 at 3.07.29 PM.jpegWhatsApp Image 2024-08-22 at 3.07.27 PM.jpegWhatsApp Image 2024-08-22 at 3.07.30 PM.jpeg