(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியில் சாம்பல் தீவு பிரதேசத்தில் நேற்று (20) வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி பயணித்த வேன் மழை காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்து சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் போனதை அடுத்து வேன் வீதியில் தடம்புரண்டதில் அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் வேனுடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் இருவர் சிறு காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் நேற்றையதினம் திருகோணமலையில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருவதுடன் நேற்றையதினம் மாத்திரம் திருகோணமலை பிரதேசத்தில் இரண்டு விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.