( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் சி. சுதாகரன் (நீலையூர் சுதாவின் ) ‘கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் 24 – 8 – 2024. சனிக்கிழமை, காலை 10 மணிக்கு இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில், உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர் வ. பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை,’ 76 சி’ நண்பர்கள் வட்டத்தினதும், கல்முனை வடக்கு கலாச்சார பேரவையினதும் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும்
இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவிப் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்த ஜீ மகராஜ் (உதவி பொது முகாமையாளர் இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) கலந்து ஆசி வழங்குவார்.
முதன்மை அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியில் ஒரு சகாப்த காலத்துக்கு மேல் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டவரும், கவிஞரும் எழுத்தாளருமான வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன். ( மேலதிக மாகாண பணிப்பாளரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டக்களப்பு.) மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.