மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர் வாழும் எல்லைக்கிராமமான மங்கள கம பிரதேசத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளர் ஈஎச்எம். விஜயரத்ன மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். (19.08.2024)
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் ஏஎம்எம். பிர்தௌஸ் மங்கள கம கிராமத்திற்குச் சென்று பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளளர்.
அதையடுத்து அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ரணில் விக்ரம சிங்கவின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர்கள் கையளிக்கப்பட்டதுடன்வீடுவீடாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இந்த பிரசாரப்பணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் மங்கள கம பிரதேச அமைப்பாளர் சுனில் பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காட்டுயானைகளில் தொல்லையினால் அவதியுறும் மங்களகம பிரதேசத்தில் யானை வேலிஅமைக்கப்படவேண்டும்.
அரச நிருவாக ரீதியில் நடைபெறும் புறக்கணிப்புக்களுக்குத் தீர்வுகாணப்படவேண்டும் என்பன போன்ற எட்டுக் கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று அமைப்பாளர் பிர்தௌஸிடம் கையளிக்கப்பட்டது.
காலத்திற்குக்காலம் வாக்குச்சேகரிப்பிற்காக தமது கிராமத்திற்கு வருகின்ற பல அரசியல்வாதிகளிடம் முன்வைக்கப்படும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுள்ளதாக மங்கள கம பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
மங்கள கம மக்களி;ன் கோரிக்கைகளில் சிலவவற்றையேனும் நிறைவேற்ற முடியாதுவிட்டால் தாம் வாக்குகளுக்காக இனியொருபோதும் இப்பிரதேசத்திற்கு வரப்போவதில்லை என்று அமைப்பாளர் பிர்தௌஸ் வாக்குறுதியளித்தார். அத்துடன் வறியநிலையிலுள்ள அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.