திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளர் ஒருவரினால் ஒருவருக்கு உயர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது நேற்று (17) சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கே.ஸ்ரீ பிரசாத் என்பவரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் தெரிய வருவது…
இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குவதாசன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் என தம்மை அறிமுகப்படுத்திய ஒருவர் தமக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் தொடர்பில் விமர்சனங்கள் எதுவும் வெளியிட வேண்டாம் என தன்னை மிரட்டியதாகவும் தொடர்ந்து அவ்வாறு செயல்பட்டால் திருகோணமலை மட்டுமல்லாது மட்டக்களப்பு வவுனியா எங்கு சென்றாலும் தன்னை கொலை செய்வதாக மிரட்டியதாக ஸ்ரீ பிரசாத் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்தார்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் இது தொடர்பில் பிராந்திய தேர்தல் ஆனைக்குழு மற்றும் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.