திருகோணமலை உத்துறைமுக வீதியில் சட்டவிரோ கட்டுமாணப் பணி தொடர்பில் குற்றச்சாட்டு!

திருகோணமலை உத்துறைமுக வீதியில் சட்டவிரோதமான முறையில் கரையோரமாக கட்டுமான பணிகள் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மக்கள் குரல்கள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகோணமலை உத்துறைமுக வீதியை அண்டிய கரையோர பிரதேசத்தில் துறைமுக அதிகார சபைக்குட்பட்ட நிலப்பரப்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்படுவதை முற்றாக அனுமதிக்க முடியாது என அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

திருவோணமலை கரையோர பிரதேசத்தை பொருத்தவரை பொதுமக்கள் ஒரு சிறிய கட்டுமான பணியை ஆரம்பித்த உடன் கரையோர பாதுகாப்பு தொடர்பில் அதனை நிறுத்தி தமது கடமையினை செய்ய வந்த அதிகாரிகள் குறித்த இந்த கட்டுமானப் பணி தொடர்பில் பொடுபோக்காக இருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்.

குறித்த பிரதேசம் துறைமுக அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக இருந்த போதிலும் குறுகிய காலத் திட்டத்தின் அடிப்படையில
திருகோணமலை சுற்றுலா துறையினருக்கு வழங்கியதாகவும் குறித்த சுற்றுலா துறையினர் குறித்த கட்டுமான பணியினை நிரந்தரமாக அமைப்பதையும் அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் குறித்த கட்டுமானப் பணிகளை எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது, குறித்த கரையோர கட்டுமான பணிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பில் எந்த அதிகாரிகளுக்கும் இதுவரை சரியான தகவல்கள் வழங்க முடியாமல் உள்ளதாகவும் குறித்த கட்டுமான பணியினை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்