(பாறுக் ஷிஹான்) பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று (14) காலை இடம்பெற்றது.
இதன் போது குறித்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்மாந்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது போக்குவரத்து பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.