ஜனாதிபதியின் தலையீட்டால் அதிகரிக்கப்பட்ட தோட்ட தொழிலார்களின் சம்பளம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வரை இன்று (12) முதல் உயர்த்துவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கியமைக்காகஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தோட்டத் தொழிலாளர்களுகள் மரியாதை செலுத்துவதாக கொழும்பில் இடம்பெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம்” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்ட முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்பிரச்சினைக்கு அப்பால் தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் போன்றவற்றை தீர்க்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சுரேஷ் தெரிவித்தார்.

இன்று (12) முற்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு 8 பேர்ச்சஸ் காணி உரிமையை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதே உரிமை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

2300 தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து பின்னர் விரைவில் அந்த நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.