( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 73 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை முதல் பஜனை கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலய குரு சிவ ஸ்ரீ தியாகராஜ குருக்கள் குருபூஜையை நடாத்தினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
முடிவில் பாரிய அன்னதானம் இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் குருபூஜை இன்று 12 ஆம் தேதி இடும்பன் பூஜையுடன் குருபூஜை நிறைவடைந்தது.