(ரவ்பீக் பாயிஸ் ) சட்ட விரோதமான முறையில் யாப்பின் விதிகளை புறக்கணித்து திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய நிர்வாகத்தினை தம்வசமாக்க நினைக்கும் கிழக்கு ஆளுநரது சட்டவிரோத செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையனர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திருக்கோணேச்வர ஆலய பரிபாலன சபையினால் (11) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஆலய பரிபாலன சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆலய பரிபாலன் சபைத் தலைவர் திலகரத்தினம் துஷ்யந்தன்…
ஆலயத்தில் அண்மையில் திருட்டுப் போனதாக கூறப்படும் சோழர்கால நகை தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பிலாக போலியான செய்திகள் பரப்பப்பட்டதாகவும் அது ஆளுநர் செயலகத்தின் மூலமாகவும் போலியான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுவரைகாலமும் படிப்படியாக நடாத்தப்பட்டு வரும் நிர்வாகசபையில் எந்த வகையிலும் சோளர் காலத்தினுடைய நகைகள் எதுவுமே இதுவரை கையிருப்பிலும் இல்லை கைமாறப்படவும் இல்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.
காணாமல் போனதாக கருதப்படும் நகைகள் தினசரி பாவனைக்காக பயன்படுத்தப்படும் 3 பவுன் நகை மாத்திரமே என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக் அலய பொதுச் சபை கூட்டம் ஒன்றினை கூட்டுமாறு தம்மை பணித்ததாகவும் அதற்கு யாப்பின் அடிப்படையில் அனுமதி இன்மையால் அதுதொடர்பில் தெளிவாக ஆலய தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்த ஆலய பரிபாலன சபையின் தலைவர்.
தங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் தொடர்பிலும் குறிப்பாக இன்றையதினம் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களால் பொதுச்சபை கூட்டம் எனும் போர்வையில் திட்டமிட்ட அபகரிப்பிற்கு வழிகோலுவதாகவும் விசனம் தெரிவித்தார்.
இன்றையதினம் ஆளுனர் அவர்களால் கூட்டப்படும் கூட்டமானது அதிகாரத்தினை மீறும் வகையில் அமைவதாக இதன் போது கருத்து வெளியிட்ட கொவில் நிர்வாகத்தினர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவரது பிரத்தியேக உதவியாளர்கள் மூலம் தம்மை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் போசகர் பதவிக்கு அனுமதிக்குமாறும் வலியுறுத்தியதாக திருக்கோனேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் திருக்கோணேஸ்வர ஆலய யாப்பின் விதிமுறைக்கு அமைய அவ்வாறு செய்ய முடியாது என த ஆலய பரிபாலன சபை சார்பில் தாம் அவருக்கு தெளிவுபடுத்தியதாகவும் தொடர்ந்தும் கிழக்கு மாகாண ஆளுநர் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.