சந்திரகுமார் சஜித்துடன் இணைவு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த ப.சந்திரகுமார் ஜக்;கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதையடுத்து அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸா கட்சி அலுவலகத்தில் வைத்து சம்பீராய பூர்வமாக வழங்கிவைத்தார்.