ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திற்கான செயற்குழுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் அக் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் 2024.08.11ஆந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 04.00 மணிக்கு அட்டாளைச்சேனை சக்கி கூட்ட மண்டபத்தில் (மீனோடைக்கட்டு) இடம்பெறவுள்ளது.

கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளப்படவுள்ள பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதுடன் பிரதேச ரீதியான அமைப்பாளர்களுக்கு அன்றைய தினம் பொறுப்புகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் பொருட்டு இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர்,செயலாளர மற்றும் உச்சபீட உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னால் மாகாண சபை அமைச்சர்கள்,முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள்,முன்னால் மாநகர சபை,நகர சபை,பிரதேச சபை தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அத்தோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் ஏ.சி. சமால்டீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.