இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான தமது நாட்டுத் தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் “உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்” என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்கின்றது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 – பி.ப. 1.30 வரை இடம்பெறவுள்ளது.
இது இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் தமது பிரச்சினைகளை முன்வைத்து தூதுவருடன் கலந்துரையாடுவதற்கும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இந்த சந்திப்பு இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமை தினங்களில் மு.ப. 9.30 – பி.ப. 1.30 வரை இடம்பெறும்.
ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு50 ஆண்டு பூரணமாவதைக்கொண்டாடுவதுடன் இணைந்ததாக அறிமுகப்படுத்துகிறது.
இந்த சந்திப்பில் பின்வரும் தொலைபேசி/ வாட்ஸ்அப் (WhatsApp)/ ஐ.எம்.ஓ. (IMO) ஆகிய இலக்கங்களின் ஊடாக கலந்து கொள்ள முடியும் +966 56 174 4748