மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் இரு வேறு வழக்குகளில் சில கட்டளைகள் மன்றில் கட்டளைகளாக்கப்பட்டுள்ளன என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் வழக்குகள் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் இரு புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்குகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன.
இதன்பிரகாரம் 2013 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழியும் 2018 ஆம் ஆண்டு மன்னார் சதோச மனித புதைகுழியும் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ் வழக்குகள் புதன்கிழமை (07) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இந்த வழக்குகளில் தொடர்ச்சியாக மன்றில் முன்னிலையாகி வருகின்றார்.
புதன்கிழமை (07) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மன்னார் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட சதோச மனித புதை குழி வழக்கு மற்றும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்ககள் விசாரணைகளுக்கு எடுக்கப்பட்டன.
இந்த வழக்குகள் தொடர்பாக தொடர்ச்சியாக நீதிமன்றில் கலந்து கொண்டு பின் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்
இந்த வழக்கானது ஒரு கலந்துரையாடல் முறையில் இடம்பெற்றது. இதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் வைத்தியர் ராஜபக்ஷ , களனி முன்னாள் பேராசிரியர் ராஜ்சோமதேவ . பொலிஸ் பொறுப்பதிகாரி போன்ற அனைவரின் முன்னால் காணாமல்போன அலுவலக சட்டத்தரணி . காணாமல்போன குடும்பங்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மற்றும் அரச சட்டத்தரணி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அப்பொழுது இங்கு பல விடயங்கள் கட்டளைகளாக ஆக்கப்பட்டன.
ஏற்கனவே இருந்த மனித புதைகுழியை சுற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேராசிரியா ராஜ்சோமதேவ அவர்களினால் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கேட்கப்பட்டதுக்கு இணங்க இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே நீதிமன்ற கட்டுக்காவலில் காணப்படுகின்ற மாதிரிகளில் எலும்புகள் பிறம்பாகவும் பிறப் பொருட்கள் பிறம்பாகவும் பிரித்தெடுத்து பிறப் பொருட்களை பேராசிரியா ராஜ்சோமதேவ அவர்களிடம் கையளிக்கப்படுவதாகவும்
எலும்புகளை எடுத்து இறப்புகளுக்கான காரணங்களை அறிய பால் . வயது போன்ற பிற விடங்களை அறிவதற்கான அறிக்கைகளை பெறுவதற்காக பிரித்து எடுப்பதற்காகவும் ஒக்டோபர் 16ந் திகதி திகதியிடப்பட்டுள்ளது.
இத்துடன் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டளையையும் கட்டளையாக்கியுள்ளது. அதாவது நிள அளவைத் திணைக்களம் அரசாங்க அதிபர் திணைக்கள அலுவலகர் தொல்பொருள் திணைக்களம ஆகியன இந்த பிரதேசம் எவ்வாறு காணப்பட்டது
இதன் வரலாறு இது எவரின் கட்டுக்காவலில் இருந்தது என்ற அறிக்கைகளையும் சமர்பிக்க வேண்டும் என்றும் கட்டளையாக்கப்பட்டது.
அகழ்வின்போது பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது இதற்கான நிதி உதவியை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் செய்வதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஒக்டோபர் 16ந் திகதி மேலதிக நடவடிக்கைக்காக திகதியிடப்பட்டுள்ளது.
-அத்துடன் இன்றையத் தினம் (07) மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு இந்த நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது மாதிரிகள் சேகரிக்கப்ட்டு நீதிமன்றின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பகுதி பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளது. இது எவ்வாறு அனுப்பப்பட வேண்டும். இதன் கட்டுக்காவில் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை வைத்தியரத்தின அவர்கள் சமர்பிக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட எலும்புகளின் பரிசோதனையின் அறிக்கையை ஒக்டோபர் 16ம் திகதி சமர்பிக்க வேண்டும் என்றும் வழக்கு இத் திகதியில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.